X
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி புறவழிச் சாலையில் சாம்பல் லோடு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியில் பின்பக்க டேங்கர், லாரியிலிருந்து கழன்று சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்து; லாரியின் டேங்கரில் இருக்கும் சாம்பலை கிரேன் மூலம் வேறு லாரிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 டன் சாம்பல் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று லாரி ஒன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி புறவழிச்சாலை மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் முத்தரையர் நகர் விலக்கு பகுதியில் சாம்பல் லோடு ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் இருந்த டேங்கர், லாரியிலிருந்து தனியாக கழன்று மறுபக்கம் சாலையில் பாய்ந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக எந்த வாகனமும் வரவில்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் அந்த டேங்கரிலிருந்து கிரேன் உதவியுடன் அந்த டேங்கரில் இருக்கும் சாம்பலை வேறு லாரிகளில் மாற்றும் பணிகள் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் பணியாளர்கள் அந்த டேங்கரில் உள்ள இறங்கி சாம்பலை கிரேன் மூலம் வேறு லாரிக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story