தைப்பூசம்

தைப்பூசம்
X
தைப்பூச தேர்த்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஈரோடு கொங்கலம்மன் கோயிலில் னஆண்டுந்தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு, தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 3ம் தேதி காலை 5.30 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காப்புக்கட்டுதல், கொடியேற்றமும், சப்பரத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 4 முதல் நேற்று வரை (8ம் தேதி) சப்பரத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்று வந்தது. இன்று (9ம் தேதி) பொங்கல் வைத்தலும், மாவிளக்கு எடுத்தலும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்தல் வடம் பிடித்தல் விழா 11ம் தேதியும், 108 வலம்புரி சங்காபிஷேகம் தெப்போற்சவம் 12ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள தேர் அலங்காரம் செய்யும் பணியும், தேர் செல்லும் செல்லும் வழிகளான மணிக்கூண்டு, டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, பொன் வீதி, அக்ரஹார வீதி, காரைவாய்க்கால் அம்மன் கோயில் வீதிகளில், சாலையோரத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணியும், சாலை சீரமைப்பு பணியும் நடைபெற்று வருகிறது
Next Story