அறிவிப்பு

X
ஈரோடு மாநகராட்சிக்கு 2024–2025ஆம் நிதியாண்டில் செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : 2024–2025ஆம் நிதியாண்டில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகையினங்கள், பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம் மற்றும் இதர வரியினங்கள் உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். வரிவசூல் மையங்கள் சனிக்கிழமை உட்பட அனைத்து வேலை நாட்களிலும் ( அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வரியினங்களை செலுத்த வேண்டும். அனைத்து வரி மற்றும் கட்டணத் தொகையினை ரொக்கம், காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் tnnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் செலுத்தலாம். ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணத்தொகையினை தாமதமின்றி செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story

