தேர்வு

X
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி- 2, 2 ஏ அடங்கிய பதவிகளுக்கான முதன்மை தேர்வினை 749 தேர்வாளர்கள் எழுதினர்.ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 2, 2ஏ அடங்கிய பதவிகளுக்கான முதன்மை தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கென திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இத்தேர்விற்கு 789 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 749 தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். 40 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கென சொல்வதை எழுதும் 6 நபர்கள் நியமிக்கப்பட்டனர்.மேலும், தேர்வு மையங்களில் தேவையான தடையில்லா மின்சாரம், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே,, இந்த தேர்வையொட்டி, 1 மொபைல் குழு, 4 வீடியோ கேமரா குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
Next Story

