கைது

கைது
X
மூதாட்டியை மிரட்டி 17 பவுன், ரூ. 50 ஆயிரம் கொள்ளையடித்த 3 பேர் கைது
ஈரோடு, கள்ளுக்கடை மேடு, அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் சாவித்திரி (70). கணவர் இல்லை. இவர் கடந்த 1ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, சாவித்தியிடமிருந்த 17 பவுன் நகைகள், ரொக்கம் ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.இச்சம்பவம் குறித்து சாவித்திரி ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகை, பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றை வைத்து தேடி வந்ததில் சாவித்திரியிடம் பணம், நகையை கொள்ளையடித்து சென்றது ஈரோடு, பூந்துறை ரோடு, ஜீவானந்தம் வீதியை சேர்ந்த முடிவெட்டும் தொழிலாளி வினோத் (32). ஆலமரத்து வீதியை சேர்ந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன் (42), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்த, துணிக்கடையில் வேலை பார்க்கும் புஷ்பராஜ் (எ) அஜித் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஈரோடு தெற்கு போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story