பாதுகாப்பு

பாதுகாப்பு
X
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
அன்னூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவினாசி அத்திகடவு திட்ட குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லை என முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார் இது பொதுவெளியில் பேசுபொருலான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்த நிலையில், விழாவை புறக்கணிக்க என்ன காரணம் என்பதை தெரிவித்த கருத்து, பேசு பொருளாகி உள்ள நிலையில் இன்று அவரது வீட்டிற்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.ஸஇரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு தலைமை காவலர்கள் உட்பட நான்கு பேர் குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story