தற்கொலை

X
ஈரோடு கே.கே.நகர் ஷோபனா காட்டேஜ்ஜை சேர்ந்தவர் யுவராஜா (43).இவரது 2-வது மகன் ஜெபேஸ் (12). காசிபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.சரிவர படிக்காததால் பெற்றோர் அறிவுரை கூறியுள்ளனர். கடந்த 9 இரவு 10:30 மணிக்கு ஜெபேஸ் டி.வி மற்றும் மொபைல் போன் பார்த்து கொண்டிருந்தார். இதை கண்டித்த அவரது தந்தை யுவராஜா, டி.வி,யை நிறுத்தி விட்டு படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் சோகத்துடன்ஜெபேஸ் படுக்கை அறைக்கு சென்றார்.இரவு 10:45 மணிக்கு படுக்க அறையில் ஜெபேஸ் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருப்பதைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே ஜெபேஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

