
X
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது; ரூ 1.5 லட்சம் மதிப்புடைய புகையிலை பொருள்கள் பறிமுதல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பாளையம்பட்டி காமராஜர் நகர் பகுதியில் கந்தசாமி(48) என்பவர் டீ கடையில் நகர் காவல் நிலைய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் சோதனையில் அந்த கடையின் பின்புறம் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்து சுமார் ரூ 1.5 லட்சம் மதிப்புடைய புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.
Next Story

