பொதுக்கூட்டம்

X
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே லக்கம்பட்டி பேரூராட்சியில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் மான செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து இந்த பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: தடுக்கி விழுந்தால் தமிழகத்தில் அதிமுகவினர் யார் இருக்கிறார்கள் என்று அனைவரது பெயரும் எனக்கு தெரியும் காரணம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் உடன் 14முறை எம்ஜிஆர் உடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் 1972ம் ஆண்டு அதிமுக இயக்கத்தினை தொடங்கிய போது பல்வேறு சோதனைகள் வந்தது அந்த தலைவருக்கு வந்த சோதனை உலகத்தில் யாருக்கும் வந்து இருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சிய வள்ளலாக வாழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்டளை அடிப்படையில் இந்த பொதுக்கூட்டம் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது இங்கு வந்துள்ள செய்தியாளர்கள் எல்லோரும் இல்லத்துக்கு வந்த போது செய்தியாளர் என்ன சொல்ல போகிறார்கள் என்று கேட்டார்கள் அப்போது ஒன்றும் சொல்ல போகிறது இல்லை என்று நான் சொன்னேன் அதே தான் இங்கு வந்துள்ள செய்தியாளர்களிடம் இப்போது ஒன்றும் சொல்ல போவதில்லை என்னை யாரும் சிக்க வைக்க முடியாது எத்தனை ஆண்டு காலம் அரசியலில் எத்தனை தலைவர் சந்தித்து விட்டு நிற்கிறேன் என்று உங்களுக்கு தெரியும், அதனால் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றும் கிடைக்காது நான் செல்லும் பாதை புரட்சி தலைவர் எம்ஜிஆர் ,ஜெயலிலதா பாதை அந்த பாதைகள் தெய்வங்கள் காட்டியுள்ள வழி,ரெண்டு பேரும் தான் தெய்வங்கள் வழிக் காட்டி அவர்கள் இல்லையென்றால் நான் இந்த இடத்தில் இருந்து பேசி இருக்க முடியாது 1977ம் ஆண்டு தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சட்டமன்றத் தேர்தல் நின்றேன் அப்போது தலைவர் சத்தியமங்கலத்தில் நிற்க போகிறாய் என்று சொன்னார், நான் அந்த பகுதி காங்கிரஸ் கட்சியும், கர்நாடக எல்லையாக உள்ளது என்று சொன்னேன் அப்போது எம்ஜிஆர் என்னிடம் மக்கள் மத்தியில் சென்று எம்ஜிஆர் என்று சொல் என்று சொன்னார் வெற்றி பெற்று விடுவாய் என்று சொன்னார் அந்த வகையில் தான் எல்லோரும் நினைக்கிறார்கள் அத்திக்கடவு அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் நடத்திய குழுவினருடன் அழைத்த போது ஏன் எங்களை வாழ வைத்த எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படம் இல்லையென்று கேட்டேன் அதனால் பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை மறுபடியும் சொல்கிறேன் எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததால் காரணத்தால் தான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை காரணம் என்னை வாழ வைத்தவர்கள் நான் இந்த இடத்தில் நிற்க வித்துவிட்டவர்கள் என்னை பற்றி எத்தனையோ பேர் என்னவெல்லாம் பேசி கொண்டு இருக்கிறார்கள் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை,அதைப்பற்றி கவலை இல்லை என்னை பொறுத்தவரை நேர்மையான பபாதையில் தன்னலம் கருதாமல் பாடுபடக்கூடியவன் என்று மறந்து விடக்கூடாது,எத்தனையோ வாய்ப்பு வரும்போது வாய்ப்பு பற்றி கவலை படாமல் இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான் அதை மறந்து விடக்கூடாது,என்னை சோதிக்காதீர்கள் நான் வேண்டுகோளாக வைக்கிறேன் அதிமுக இயக்கம் தொண்டர்கள் நிறைந்த இயக்கம்,ஒற்றுமையோடு பணியாற்றக் கூடிய இயக்கம், விட்டுக் கொடுக்கும் இயக்கம், என்பதை தொண்டர்கள் மறந்து விட வேண்டாம் ஏனென்றால் நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் வந்தவர்கள் ரகசிய கூட்டம் என்று செய்தியாளர் கேட்ட போது நான் கோவிலுக்கு சென்று வருகிறேன் தட்டில் உள்ள திருநீறு பூசிக்கொண்டு செல்லுங்கள் என்று சொன்னேன் ஏதாவது செய்தியாளர் கிடைத்துவிடாதா என்றும் அதை போட்டு என்னையும் எதிர் கட்சியையும் தூங்க விடாமல் செய்வது எதற்காக,செங்கோட்டை எவ்வளவு காலமாக விவரமாக இருக்கிறார் என்று பல சோதனைகளில் நீங்கள் பார்த்து இருக்ககூடும் அதனால் நான் தெளிவாக இருக்கிறேன் எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு என்பது அவர்கள் போட்டது போலீசார் எதுவும் நடந்து விடக்கூடாது என்று போட்டு இருக்கிறார்கள், கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையன் சுற்றி சுற்றி வருகிறார்கள், எனது வீட்டில் கூட்டம் என்பது சாதரணமாக இருப்பார்கள் அந்தியூரில் இருந்து பத்திரிகை கொடுக்க வந்தார்கள், செய்தியாளர் செய்தியை தவறவிடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் இவர்கள் என் வீட்டின் முன்பு காலையில் இருந்து கஷ்டப்பட்டது இருப்பது பார்த்து நானே மனசு விட்டேன்,எனது 43ஆண்டுகளில் யாரிடமும் நான் கோபம் பட்டது இல்லை தவறான வார்த்தை பேசியது இல்லை இது தான் எனது வாழ்க்கை வரலாறு தமிழகத்தில் பொறியியல் படிப்பை உருவாக்கியவர் எம்ஜிஆர் 493பொறியல் கல்லூரி தமிழகத்தில் இருக்க எம்ஜிஆர் தான் காரணம் இன்று ஆண்டுக்கு 3லட்சம் பேர் பொறியியல் படிக்கிறார்கள் இதையெல்லாம் உருவாக்கியவர் தான் எம்ஜிஆர் தான் எம்ஜிஆர் 13ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததால் தான் திமுக ஆட்சிக்கு வரவில்லை காரணம் ஏழை எளிய மக்களின் மீதான சிந்தனையால் தான் 1989ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு புரட்சி தலைவி ஜெயலலிதா அதிமுக கட்சி என்கிற கப்பலுக்கு மாலுமியாக இருந்து வழிநடத்தி சென்றார் உலகத்தில் உள்ள அனைவரும் அம்மா என்று அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா தான் தாலிக்கு தங்கம்,39லட்சம் பெண்கள் சுயஉதவிக் குழு கொண்டு வந்தார்,இப்படி தெய்வங்கள் தான் நம்மை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள் ஜெயலலிதா விரலை காட்டி சொல்லுவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு முன்பு செய்தவன் நான்,கொள்கை பரப்பு செயலாளராக எனக்கு பதவி வழங்கினார் ஜெயலலிதா செங்கோட்டையன் பற்றி கடந்த கால கட்சி கூட்டத்தில் ஜெயலலிதா சொன்ன புகழ் வார்த்தைகள் பற்றி வீடியோவை பொதுமக்கள் மத்தியில் போட்டு காண்பித்தார் தொண்டனோடு தொண்டனாக இருந்து இணைந்து இந்த இயக்கத்தில் பணியாற்றக்கூடியவன் நான்,நான் என்றும் தலைவன் என்று சொன்னதில்லை எப்போதும் தொண்டன் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் இன்று ஒவ்வொரு வார்த்தைகள் கவனமாக பேச வேண்டி இருக்கிறது நாம் 4ஆண்டு நல்லாட்சி தந்தோம் ஆனால், திமுக ஆட்சியில் சொத்து வரி குடிநீர் வரி என பல்வேறு இடர்பாடுகள் சந்திக்கிறோம் நாம் 1500ரூபாய் 6சிலிண்டர் கொடுப்போம் என்று சொன்னோம் அப்போதும் நம்மை மக்கள் அம்போன் விட்டு சென்றார்கள் மீண்டும் தமிழகத்தில்தொண்டர்களோடு தொண்டனாக இருந்து பணியாற்றுவேன் நல்லாட்சியை புரட்சி தலைவர்எம்ஜிஆர்,புரட்சி தலைவி ஜெயலலிதா தலைமையில் உருவாக்குவோம்
Next Story

