தற்கொலை

தற்கொலை
X
பள்ளத்தில் குதித்து முதியவர் தற்கொலை
பெருந்துறை அடுத்த துடுப்பதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (68). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பேருந்தில் இருந்து விழுந்ததால், படுகாயமடைந்திருக்கிறார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீட்டில் இருந்த அவர், வலி தெரியாமல் இருப்பதாக அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். கடந்த 10ம் தேதி வெளியே சென்ற செல்வராஜ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில், நேற்று (12ம் தேதி) காலை 6:00 மணிக்கு, பாப்பங்குட்டை பகுதியில் உள்ள பள்ளத்தில் செல்வராஜ் மிதங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மன விரக்தியில் அவர் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.
Next Story