போட்டி

போட்டி
X
ஈரோட்டில் தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டி
ஈரோடு, பிப். 15- ஈரோடு நீல்கிரிஸ் பேட்மிண்டன் அகாடமியில் தமிழ்நாடு இறகு பந்து சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்கங்களின் சார்பில் ‘எஸ்கேஎம் பெஸ்ட் ஓபன்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டி தொடங்கியது. போட்டியின் தொடக்க விழாவுக்கு, ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்க தலைவர் செல்லையன் என்ற ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சுரேந்திரன் முன்னிலை வைத்தார். முன்னதாக எஸ்கேஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ்குமார் வரவேற்றார். போட்டிகளானது, நாக் அவுட் முறையில் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா புதுச்சேரி, மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த போட்டிகள் இன்றும்(15ம் தேதி), நாளையும்(16ம் தேதி) நடக்கிறது. இறுதி நாளில் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.20 லட்சமும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.80 ஆயிரமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story