விபத்து

X
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒலகடம், அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்தி (41). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு கிளையில் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்தி ஈரோடு - பவானி வழித்தடத்தில் டவுன் பஸ்சில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஈரோட்டில் இருந்து பவானிக்கு வந்த பஸ் காளிங்கராயன் பாளையத்தில் வளைவில் திரும்பிய போது படியில் நின்று கொண்டிருந்த கார்த்தி எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீது சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கார்த்தி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

