தேர்வு

தேர்வு
X
10-ம் வகுப்பு செய்முறை தேர்வு 22-ந் தேதி தொடங்குகிறது முதன்மை கல்வி அலுவலர் தகவல்
தமிழகத்தில் பிளஸ்- 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 23-ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்- 1 க்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 25-ம் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி, பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இதில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -1 மற்றும் பிளஸ்- 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்த செய்முறை தேர்வு வருகிற 21-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு வருகிற 22-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்காக செய்முறை தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
Next Story