திருட்டு

X
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பி.வெள்ளாள பாளையம், எஸ்.பி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60). இவருக்கு திருமணம் ஆகி மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணம் ஆகி காஞ்சிகோவிலில் கணவருடன் வசித்து வருகிறார். ரவிச்சந்திரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ரவிச்சந்திரன் காஞ்சி கோவிலில் உள்ள மகளை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். மகள் வீட்டில் 3 நாட்கள் தங்கி கடந்த 17ஆம் தேதி மாலை மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் தரைத்தளத்தில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைப்போல் வீட்டின் முதல் தளத்தில் உள்ள முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு ஒரு கல் ஆங்காங்கே சிதறி கலந்துள்ளது. வீட்டில் உள்ள பீரோ நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், இதைப் போல் பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு - 4, காமாட்சி விளக்கு - 2, வெள்ளி டம்ளர் - 3 ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நேற்று ரவிச்சந்திரன் கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story

