அபராதம்

அபராதம்
X
தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த தனியார் நிறுவனம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை
ஈரோடு மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட சொட்டையம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்து வருவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  அதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் கயல் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி சுகாதார அலுவலர் தங்கராஜ் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, அந்நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து, 8.2 கிலோ பேப்பர் கப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
Next Story