கைது

X
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் மற்றும் பவானி போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடணையை அடுத்துள்ள மருதவயல் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (45), பவானியை அடுத்துள்ள நல்லிபாளையத்தை சேர்ந்த அம்மாசிகவுண்டர் (75), சதீஷ் (42) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 21 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story

