தற்கொலை

தற்கொலை
X
நம்பியூர் அருகே தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி சாவு
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூரை சேர்ந்தவர் ரேவதி (37). இவரது கணவர் குணசேகரன் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் மது குடிக்கும் பழக்கத்தால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில், நேற்று முன் தினம் ரேவதி, வீட்டில் வைத்திருந்த பிரசர் மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேவதி, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து, நம்பியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story