போராட்டம்

போராட்டம்
X
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
தமிழக அரசு அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.காலவரையின்றி முடக்கிவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஆகிவற்றை ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினை சேர்ந்த அரசு ஊழியர்கள் இன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரச ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி கைகளில் பதாகைகள் ஏந்திய படி கோசங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story