
X
திருச்சுழி அருகே மாசி களரி திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய ஆண்கள் மட்டும் பங்கேற்ற அருள்மிகு ஸ்ரீ வெங்கல கருப்பசாமி, ஸ்ரீ சங்கலி கருப்பசாமி சக்தி பூஜை; கிடாய்கள் சேவல்கள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பனையூர் அங்காள பரமேஸ்வரி குருநாதர் சாமி மாசி களரி திருவிழா பதினெட்டாம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது 16 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் 9 அடி உயரத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு வெண்கல கருப்பசாமி, சங்கிலி கருப்பசாமி சக்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த சக்தி பூஜையின் சிறப்பு அம்சங்களாக இரவு கிடாய்கள் மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டு ரத்தத்தை பூசாரி அருள் வந்து குடித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் நடுநிசியில் வெங்களா கருப்பசாமி சங்கிலி கருப்பசாமி கையில் அரிவாளுடன் வேட்டைக்கு சென்று ஆக்ரோசமாக வந்து பின்னர் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர். அதனைத் தொடர்ந்து வெட்டப்பட்ட ஆடு மற்றும் சேவல்கள் சமைக்கப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உனக்காக சமைக்கப்பட்ட இறைச்சி மண் குடுவையில் எடுத்துச் செல்லப்பட்டு சுற்றி வந்து தேவதைகளுக்கு படைக்கப்பட்டது. இந்த வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. இந்த அன்னதானத்தில் பனையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை ருசித்தனர். இந்த சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது காலம் காலமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. தற்போது வரை ஆண்கள் மட்டுமே பங்கேற்பது இந்த விழாவில் சிறப்பம்சமாக உள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்ற இந்த மாசி களரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

