சிறப்பாக செயல்பட்ட போலீசாரை எஸ்.பி ஆதர்ஷ் பசேராபாராட்டினார்.
போலி பத்திரம் பதிவு; இரு குற்றவாளிகளுக்கு மொத்தம் 12 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்லதுரை என்பவருக்கு கடந்த 1972-ம் வருடம் அரசாங்கத்தால் நிலமும் ஓதுக்கப்பட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். செல்லதுரை எறையூர் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்ததாகவும், எறையூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் அசோகன் (63) என்பவர் செல்லதுரை தனக்கு கிரையம் செய்து எழுதி கொடுத்தது போல ஒரு போலியான கிரைய பத்திரம் தயார் செய்து ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததுடன், தனது மனைவி இந்திராணி (59) பெயருக்கு வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 10.10.2015-ந் தேதி போலியான பத்திபதிவு செய்துள்ளார் .அசோகன் குற்ற செயலுக்கு இந்திராணியும் உடந்தையாக இருந்துள்ளார். பாண்டகப்பாடியை சேர்ந்த மாயவன் மகன் ராஜீ (60) மற்றும் சுந்தரம் (65) ஆகிய இருவரும் போலி பத்திரம் தயார் செய்து மோசடி கிரையம் செய்ய உடந்தையாக இருந்துள்ளனர், என பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் செல்லதுரை அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2008 ம் ஆண்டு 35/2008 U/s 467, 468, 471, 474, 420 IPC @ 467, 468, 471, 420 109 r/w 120(b) IPC - ហ្ន៎ លក់គ្រប់ ប செய்யப்பட்டது. மேற்படி வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கானது நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று வழக்கினை விசாரித்த பெரம்பலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ன் நீதிபதியின் விசாரணையில் மேற்படி எதிரியின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அசோகனுக்கு 467 IPCன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.2000/- அபராதம் விதித்தும், 468 IPCன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.2000/-அபராதமும் விதித்தும், 420 IPCன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.2000/-அபராதம் விதித்தும், அபராதத் தொகைகளை செலுத்த தவறினால் தலா 3 மாதங்கள் சிறை தண்டனை என விதித்தும், இந்திராணிக்கு 467 IPC r/w 109ன் படி 1 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1000/- அபராதம் விதித்தும், 468 IPC r/w 109 ன் படி 1 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1000/- அபராதம் விதித்தும், 420 IPC IPC r/w 109ன் படி 1 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1000/-அபராதம் விதித்தும் மேற்படி அபராதத் தொகைகளை செலுத்த தவறினால் தலா 1 மாதம் சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனைகளை இருவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பிரேம்குமார் தீர்ப்பளித்தார். மேலும் ராஜீ என்பவர் இறந்த நிலையில்சுந்தரம் விடுதலை செய்யப்பட்டார். வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை எஸ்.பி ஆதர்ஷ் பசேராபாராட்டினார்.
Next Story