தற்கொலை

தற்கொலை
X
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
ஈரோடு, கீழ் திண்டல், வள்ளியம்மாள் வீதியை சேர்ந்தவர் கார்த்தி (24). பயோ மெடிக்கல் படித்துள்ள இவர், குமலன் குட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி மற்றும் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று வெளியில் சென்றிருந்த அவரது பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கார்த்தி தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே கார்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து, ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story