சாவு

X
சேலம், குகை, ஆண்டிப்பட்டி ஏரித்தெரு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (52). இவரது மனைவி வள்ளி (45). விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூர்த்தி, மனைவியை பிரிந்து ஈரோட்டில் அவரது தங்கையின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.மூர்த்திக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளது. இந்த நிலையில், மூர்த்தி, நேற்று பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது, மருத்துவரை பார்க்க 14-வது வார்டில் வரிசையில் காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

