ஏலம்

X
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பண்டிகையொட்டி சாமிக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம்,வெள்ளி மோதிரம்,நாணயம் போன்றவை ஏலத்தில் விடுவது வழக்கம்.இதனை தொடர்ந்து இந்தாண்டு நடைபெற்ற மகாசிவராத்திரி பண்டிகையொட்டி பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோவிலில் ஈஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சாமிக்கு சிவராத்திரி அன்று பயன்படுத்திய எலுமிச்சை பழம்,சாமி நெற்றியில் வைக்கப்பட்ட வெள்ளி நாணயம்,கையில் போடப்பட்ட வெள்ளி மோதிரம் ஆகியவை ஏலத்தில் விடப்பட்டது.இதில் தங்கராஜ் என்பவர் எலுமிச்சை பழத்தை 13ஆயிரம் ரூபாய் கொடுத்தும், மொடக்குறிச்சியை சேர்ந்த ரவிக்குமார் பானுப்ரியா தம்பதியினர் வெள்ளி நாணயத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கும் இதே போன்று வெள்ளி மோதிரத்தை அரச்சலூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் 43,100ரூபாயும் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர்.இதற்கு முன்னதாக சாமிக்கு பயன்படுத்திய மூன்று பொருட்களையும் ஏலத்தில் எடுக்க ஆரம்ப விலையில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு பொருட்களை ஏலத்தில் எடுத்து சாமியை வணங்கி சென்றனர்.ஏலத்தில் எடுக்கப்படும் பொருட்களை வீட்டில் சாமி அறை, தொழில் செய்யும் இடம் ஆகியவற்றில் வைக்கும் போது வீட்டில் ஐஸ்வரியம் கூடும், ஆரோக்கியம் அதிகரிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.ஆண்டுதோறும் பூஜை பொருட்கள் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த நிலையில் தற்போது பூஜை பொருட்கள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆண்டு தோறும் ஏலத்தில் விடப்படும் பொருட்கள் விலை அதிகரித்து கொண்டு செல்வதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Next Story

