நாய்க்கடி

நாய்க்கடி
X
ஈரோடு அரசு மருத்துவமனையில் 2 மாதங்களில் நாய் கடிக்கு 780 பேருக்கு சிகிச்சை
ஈரோடு மாநகர் மட்டுமின்றி கிராமங்களிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்கள், ஆடு, மாடு கோழிகளையும் கடிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் வீதிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இரவில் வீட்டுக்கு நடந்து செல்ல முடியவில்லை. ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தெருநாய்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டுவது, இரவு நேரங்களில் தனியாக செல்லும் சிறுவர், சிறுமிகள், பெண்களை துரத்துவது என தெரு நாய்கள் தொல்லை தினமும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி தெரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:- ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரியில் நாய் கடிக்காக 550 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதில் 38 பேருக்கு நாய் கடியின் தீவிரம் அதிகமாக இருந்ததால் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இம்மாதம் இதுவரை 230 பேர் நாய் கடிக்கான சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 13 பேர் அதிக கடிக்கு ஆளானதால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். கடந்த இரு மாதங்களில் 780 பேர் வரை நாய் கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு போதிய எண்ணிக்கையில் நாய் கடிக்கான மருந்துகள் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story