சூதாட்டம்

X
ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள காசிபாளையம், பேயணைத்துறை, பவானி ஆற்றங்கரையோரத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். அதில் காசிபாளையத்தை சேர்ந்த ஞானசேகரன் (31), கரட்டடிபாளையத்தை சேர்ந்த சசிகுமார் (31), பஞ்களாபுதூரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (26) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். மீதி மீதமிருந்த 4 பேர் அவர்களது இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் பிடிபட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தப்பியோடியவர்களின் இருசக்கர வாகனங்கள் 4, சேவலகள் 3, சூதாட்ட பணம் ரூ. 1,500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Next Story

