
X
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பெட்ரோல் பல்க் அருகே லாரியின் மீது கார் மோதிய விபத்தில் காரை ஓட்டிச் சென்ற கோவில் பூசாரி (புரோகிதர்) பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி; திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை கோயம்புத்தூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் என்பவர் மகன் ஸ்ரீநாத்(38). கோவில் பூசாரி (புரோகிதர்) ஆக உள்ள ஸ்ரீநாத் பரிகாரம் செய்வதற்காக குடும்பத்துடன் பரமக்குடி வந்துள்ளார். இந்த நிலையில் பரிகாரத்தை முடித்துவிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளை தங்க வைத்துவிட்டு, ஸ்ரீநாத் மட்டும் காரில் சொந்த வேலையாக திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டை சாலையில் திருச்சுழி பெட்ரோல் பல்க் அருகே கார் சென்று கொண்டிருக்கும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் காரை ஓட்டிச் சென்ற ஸ்ரீநாத் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

