தற்கொலை

தற்கொலை
X
சத்தியமங்கலம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கோவை மாவட்டம் செட்டிபாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் முருகன் (68). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மாதாள் என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன் உள்ளனர். முருகன் உடல் நலம் பாதிப்பால் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். முருகன் கடந்த 25-ம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி இரவு பவானிசாகர் கீழ்பவானி வாய்க்கால் கரை அருகே முருகன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் முருகனை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனா். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு முருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகன் மனைவி மாதாள் பவானிசாகர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story