சாவு

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முத்துபாண்டிபேட்டை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 49). இவர் ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாலிங்கத்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

