அபராதம்

அபராதம்
X
ஈரோட்டில் இட்லி தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பு
வெளி மாநிலங்களில் இட்லி தயாரிப்பின் போது பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து செய்திகள் பரவி வந்த நிலையில், தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர், மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஆகியோர் தமிழ்நாட்டில் இட்லி தயாரித்து வழங்கும் இடங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஈரோடு கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ் செல்வன் அருண்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆய்வின்போது கருங்கல்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இட்லி தயாரிக்கும் இடங்கள், மற்றும் மாநகரப் பகுதியில் உள்ள உணவகங்கள் தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில், இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாடு எதுவும் கண்டறியப்படவில்லை. ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு 6000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து விநியோகம் மற்றும் இருப்பு வைத்தல் தொடர்பாக ரூ 3000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஈரோடு கலெக்டரின் உத்தரவின் பேரில் ஈரோட்டில் இட்லி தயாரிக்கும் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்க ஆவண செய்யப்படும். பொதுமக்கள் உணவு தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
Next Story