அபராதம்

அபராதம்
X
ஈரோடு மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்த 12 கடைகளுக்கு அபராதம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக சுகாதார துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்துக்குட்பட்ட திண்டல், பழைய பாளையம் பகுதிகளில் உள்ள மளிகை கடை பேக்கரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார ஆய்வாளர், ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்பாடு குறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் 12 கடைகளில் பிளாஸ்டிக் கவர், கப்புகள் பயன்பாட்டில் இருப்பதை கண்டறிந்து அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story