தேன்கூடு

தேன்கூடு
X
திண்டல் முருகன் கோவிலில் பொதுமக்கள் -பக்தர்களை அச்சுறுத்திய தேன்கூடு அகற்றம்
ஈரோடு திண்டல் வேலாயுத சாமி கோவிலின் மலைக்கு செல்லும் படிக்கட்டு மலைப்பகுதியில் தேனீக்கள் கூடுக்கட்டி இருந்தது. இந்த கூட்டில் இருந்து வெளியேறும் தேனீக்கள் அவ்வப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களை கொட்டி அச்சுறுத்தி வந்தது. இதனால் படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் ஈரோடு தீயணைப்பு துறையினர் திண்டல் முருகன் கோவிலுக்கு சென்று தேன் கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்தர்கள் படிக்கட்டு வழியாக வருவதற்கு தடைவிதித்து மாறாக மலைப்பாதை சாலை வழியாக கோவிலுக்கு செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறாக இருந்த தேன் கூட்டை ரசாயன பொடி தூவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் முழுவதும் அகற்றினர்.
Next Story