சாவு

சாவு
X
சத்தியமங்கலம் அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து பெயிண்டர் திடீர் சாவு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவர், காந்தி நகர் பகுதியில் உள்ள கனரக வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறை ஒன்றில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (36). செந்தில்குமார் நேற்று காலை 8 மணியளவில் பட்டறையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்தார். அவருடன் வேலை பார்த்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், வழியிலேயே செந்தில்குமார் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story