X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம், ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமர்(வயது 38). இவருக்கும், 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த நவம்பர் மாதம் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். அதன்பின்னர் ராமர், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்காடு போலீசில், சிறுமி புகார் செய்தார். அதில் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தனது தந்தை, அவருக்கு உதவியவர்கள் மற்றும் பாலியல் தொந்தரவு செய்த ராமர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதன்பேரில் சிறுமியின் கணவர் ராமர் மற்றும் தந்தை உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story