X
மக்களவையில் பொய் சொல்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.. அரசியலமைப்புக்கு எதிராக அவர் செயல்படுகிறார்"- டெல்லியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி
நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கேள்வி நேரத்தில் பதிலளிக்கக் கூடிய அந்த நேரத்தில் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு வந்திருக்கக்கூடிய அவை உறுப்பினர்களை மிக மோசமாகத் தனிப்பட்ட வகையில் Uncivilized (காட்டுமிராண்டித்தனமாக) நடந்து கொள்கிறீர்கள் என்று விமர்சித்துப் பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், எம்.பிக்கள் தவறான விஷயத்தை, பொய்யான ஒன்றை முன்வைப்பதாகவும், முதலமைச்சர் தன்னுடைய வாக்கை தவறி இருப்பதாகவும், ஒன்றிய அமைச்சர் ஒரு தவறான செய்தியை, உண்மைக்குப் புறம்பான ஒரு பொய்யான செய்தியை, அவையில் திசை திருப்பக் கூடிய வகையில் எடுத்து வைத்திருக்கிறார். அவரது பேச்சு, தமிழ்நாட்டை, தமிழ் மக்களை, தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களை, தமிழர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தி இருக்கிறது. இதனைக் கண்டித்து முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில், தமிழ்நாட்டை சார்ந்த எம்.பிக்கள் முன்னதாக ஒன்றிய அமைச்சரை சந்தித்தபோது, புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று வாக்குறுதி அளித்ததாக ஒரு பொய் பிரச்சாரத்தை செய்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய அமைச்சரை சந்தித்த எம்.பிக்களும், நானும், மும்மொழிக் கொள்கையை புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்பதைத் தெரிவிக்கவே இல்லை என்று பேசினார்.
Next Story