மனு

X
டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிறுவனத்தில் 5 ஆயிரம் ரூபாய் செலத்தினால் ஒரு லட்சம் ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய்க்கு 2 லட்சமும் என்ற அடிப்படையில், செலுத்தும் பணத்திற்கேற்ப 90 நாட்களுக்குள் வட்டியில்லாமல் கடனுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பி ஈரோடு, கோபி,சத்தி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை என சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனம் உறுதியளித்தப்படி பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் ரூபன் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பணத்தை செலுத்தி ஏமாந்த மக்கள், இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அப்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து , செலுத்திய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story

