X
தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி மீண்டும் பாதிப்பு உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்து இருந்தது இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலாளன உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி துவங்கியது இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக ஏற்கனவே உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்று பெய்து வரும் மழை காரணமாக உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்
Next Story