பலி

பலி
X
ஈரோட்டில் இரு வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி போலீசார் விசாரண
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் திலீப். இவரது மகன் சுரேஷ் (14). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று மதியம் இவர் தன்னுடன் படிக்கும் சிவபிரகாஷ், பால சூரியா ஆகியோருடன் அரியப்பம்பாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். பின்னர் ஆற்றில் இறங்கி 3 பேரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சுரேஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ் திடீரென ஆற்றில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சுரேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை கம்பெனியில் மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தனர். அதை உரை சேர்ந்த உத்தம வவுலே மகன் ரோகித் (14) என்பவரும் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று 20 நபர்கள் பவானி வாய்க்கால் பாளையத்தில் உள்ள ராஜு என்பவரது காட்டில் கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரோஹித் அவரது நண்பர்கள் சந்தோஷ் நரேஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அருகே உள்ள செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். ரோகித்துக்கு நீச்சல் தெரியாது. இந்நிலையில் திடீரென ரோகித் கிணற்றில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சத்தம் போட்டனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கேட்டு இறங்கி ரோகித்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ரோகித் திறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story