தற்கொலை

X
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, வி. மேட்டுப்பாளையம், லட்சுமிபுரம் காலனியை சேர்ந்தவர் முருகேசன் (36). இவரது மனைவி மைதிலி. இந்நிலையில் முருகேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. முருகேசன் அடிக்கடி குடித்து வந்து வீட்டில் பிரச்சனை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக அதிகமாக குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த முருகேசன் திடீரென தூக்கு போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதிக்க மருத்துவர் ஏற்கனவே முருகேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

