விடுமுறை

X

ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு 6 நாட்கள் விடுமுறை
ஈரோடு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மஞ்சளினை விவசாயிகள் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சொசைட்டி என 4 இடங்களில் ஏலம் மூலம் விற்பனை செய்வார்கள். இந்த 4 மார்க்கெட்டுகளும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும். இந்த நிலையில் ஹோலி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதாலும், அதற்கு அடுத்த நாள் 14-ம் தேதியும், அதைத் தொடர்ந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி வருகிற 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரையும் இந்த மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை விடுமுறை முடிந்து வரும் 17ஆம் தேதி முதலும், பெரிய மாரியம்மன் கோவில் விழா விடுமுறைக்கு பின் வரும் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மஞ்சள் மார்க்கெட்டுகள் வழக்கம் போல் செயல்படும் என மஞ்சள் மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story