மாயம்

X

முதியோர் 2 பேர் மாயம்
சேலம் மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (72). இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் காடையாம்பட்டியில் தங்கி, கருப்பசாமி என்பவரின் சாயப்பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி, தனது சொந்த ஊரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால், இதுவரை சுப்பிரமணியம் வீடு திரும்பவில்லை என்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனையடுத்து, அவரது மகன் லோகநாதன் (52) அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து பவானி போலீசார் தேடி வருகின்றனர். இதேபோன்று, டி.என்.பாளையம் குமரன் கோவிலைச் சேர்ந்த சாமிநாதன் (65). மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது மனைவி அமுதா (55) கொடுத்த புகாரின் அடிப்படையில், பங்களாப்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story