பேட்டி

X

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு
மத்திய அரசு நாட்டில் பதட்டமான அரசியலை ஏற்படுத்த முயற்சிக்கிறது.மத்திய அரசு தமிழ்நாடு, தமிழ்நாடு மக்கள்,தமிழ்நாடு அரசின் மீது அரசியல் யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு தங்களின் ஆர்எஸ்எஸ் கொள்கையை கட்டாயம் அனைத்து மாநிலங்களிலும் ஏற்கவேண்டும் என நிர்பந்தம் செய்கிறது.மத்திய அரசு வகுப்பு வாத கொள்கையை பின்பற்றுகிறது. ரயில்வேயில் நீண்ட தூர ரயில் பயணத்தில் உணவு பதிவுவில் சைவ/அசைவ உணவா என்ற இடத்தில் இந்து,முஸ்லீம்,கிருஸ்துவன் என கேட்கப்படுகிறது.நாடு முழுவதும் மத்திய அரசு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசின் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் எதுவாக இருந்தாலும் நிர்பந்தம் செய்வது ஏற்கமுடியாது.இது தேவையற்ற பதற்றமான சூழ்நிலையை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது.தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மொழி பிரச்சனை மட்டுமில்லாமல் தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.மூன்று,ஐந்து,எட்டு,பத்து,பன்னிரண்டு ஆகிய வகுப்புகளின் பொதுத்தேர்வு உள்ளது தான் பிரச்சினை உள்ளது.இதனால் பலர் கல்வியை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் உள்ளது. எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது குறித்து மத்திய அரசு பகிரங்கமாக வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அநாகரிகமானவர் என பேசியது கொடூரமானது.பின்னர் வருத்தப்படுகிறேன் என தெரிவிக்கிறார்.மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் இல்லையெனில் பிரதமர் மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.தமிழக அரசு மும்மொழி ஏற்காததால் மத்திய அமைச்சருக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டுள்ளது?மத்திய அரசு பழி வாங்கவேண்டும் என தமிழ்நாட்டிற்கு நிதி நிலை அறிக்கையில் எந்த நிதியும் வழங்கவில்லை.கஜா புயலுக்கு 37 ஆயிரம் கோடி நிவாரணம் கோரிய நிலையில் மத்திய அரசு ஒத்த பைசா கூட ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 1635 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை.இதனால் பயனாளிகள் (ஊழியர்கள்) போராடிக் கொண்டிருக்கின்றனர்.மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இத்திட்டத்திற்கு கோடிக்கணக்கில் நிதி குறைத்து வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறையால் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்பட்ட தமிழகம் தண்டிக்கப்படுகிறது.தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தில் தொகுதி எண்ணிக்கை குறையும் ஆனால் மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்த தவறிய மாநிலங்களில் கூடுதல் தொகுதி அதிகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 உள்ள நிலையில் 884 இருக்கை அமைத்தது ஏன்? உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. தொகுதி மறு சீரமைப்பால் தமிழகத்திற்கு 10 தொகுதிகளும் பீகார் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தொகுதியில் உருவாகும். ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையத்தில் போதிய மாணவர்கள் இல்லாததால் மாநில அரசு மூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அப்படியிருந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதனை தமிழக அரசு கைவிட வேண்டும். ஈரோடு மாவட்டம் பெருமாள் மலை பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் என்பதால் காவல்துறையினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை.இதில் கால்நடை பாதிக்கப்படுகிறது.கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு நாய் கடியால் உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.. நிதிநிலை அறிக்கையில் பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர்.சொத்து வீட்டு வரி குறைக்க வேண்டும் என அனைத்து கட்சியினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.சொத்து வரி,வீட்டு வரி குறைக்கும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.சிறு குறு தொழில் மின்கட்டணம் குறைக்கவும் தேர்தல் அறிக்கையின் படி மாதம் மின் கணக்கெடுப்பு முறை வேண்டும்.பாஜகவின் அமலாக்கத்துறை அரசியல் பிரிவு.தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மேற்கொள்ளும் யுத்தம்.அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. அண்ணாமலை உள்பட அவர் சார்ந்துள்ள அனைவரும் தெரிந்து கொண்டு பேசவேண்டும்.அண்ணாமலை தூங்குவது போல் நடிக்கிறார். தாய்மொழியின் மீது மற்றொரு மொழியே திணிக்க கூடாது.மத்திய அரசு சமஸ்கிருதம் இந்தியை தொடர்ந்து தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கீடு செய்தனர். பொதுக்கூட்டம் ஜனநாயக போராட்டம் நடத்த தடுப்பது இந்திய கம்யூனிஸ்டு எதிர்க்கிறது. திமுக என்று சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா நாங்கள் திமுக ஒழிக என்று சொல்ல மாட்டோம். மும்மொழி கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு மனுதர்மத்தை மறைமுகமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தான் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைக்கிறார்கள்.இதனால் அண்ணாமலையிடம் நீங்கள் சொல்லுங்கள் இந்தியை திணிக்க வேண்டாம் என்று என்றார்.
Next Story