தற்கொலை

தற்கொலை
X
புளியம்பட்டி அருகே 91 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை உடல் நலம் பாதிப்பால் விபரீத முடிவு
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கணக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரசம்மாள் (91). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகன், மகள்கள் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கிறார்கள். கணவர் கருப்புசாமி இறந்த நிலையில் மூதாட்டி சரசம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பால் சில மாதங்களாக மூதாட்டி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தற்கொலை செய்ய முடிவெடுத்த சரசம்மாள் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து மூதாட்டியை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர் பரிசோதித்து விட்டு மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story