கோரிக்கை

கோரிக்கை
X
சத்தியமங்கலம் அருகே சூறாவளி காற்றில் 30 வாழை மரங்கள் முடிந்து விழுந்தது நஷ்டஈடு வழங்க விவசாயி கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென சூறாவளிக்காற்று உடன் லேசான சாரல் மழை பெய்தது.சத்தியமங்கலம் அடுத்துள்ள டி.ஜி.புதூர், கே.என்.பாளையம், காளியூர் பிரிவு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்று பலமாக வீசியது. இந்த சூறாவளி காற்றின் காரணமாக, கே.என்.பாளையம் காளியூர் பிரிவு பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சாய்ந்து விழுந்தன. அந்த நபர் தோட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வாழைகளை பயிரிட்டு இருந்தார். இதில் 30 வாழை மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இந்த விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் கடம்பூர் மலைக்கிராம பகுதிகளான கடம்பூர், கல் கடம்பூர், சாலட்டி, ஏரியூர், அத்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்தது. இதைப்போல் பவானிசாகர் அணை பகுதிகளிலும் 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Next Story