முடக்கம்

X
வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 24, 25 ஆகிய நாட்கள் திங்கள் செவ்வாய் வருவதால் அதற்கு முந்தி வரக்கூடிய சனி, ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் நரசிம்மன் கூறியதாவது:-வங்கிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களை வெளியாட்களிடம் ஒப்படைக்க கூடாது. வங்கி துறையில் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 (திங்கட்கிழமை) 25 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய வங்கிகளை சேர்ந்த 2,600 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் சராசரியாக தினமும் ரூ.1,200 கோடிக்கு தேசிய வங்கிகளில் பணவர்த்தனை நடக்கிறது. வேலை நிறுத்தத்தால் இரு நாட்களில் ரூ.2,400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story

