மனு

மனு
X
பெருந்துறை பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் முன்னாள் அமைச்சர் தோப்பு தோப்பு வெங்கடாசலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று முன்னாள் அமைச்சரும், தி.மு.க ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம் மக்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை மனு வழங்கினார். இதுகுறித்து தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது:-கடந்த 10 நாட்களாக பெருந்துறையில் குடிநீர் பிரச்சினை உள்ளதால் இதனை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரி செய்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்,கோடை காலத்தில் மக்களுக்கு தண்ணீர் கூடுதலாக தேவைப்படும் நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலம் பெருந்துறை சுற்றுவட்டார பகுதி குளங்களுக்கு தண்ணீர் விட வேண்டும்.இதன் மூலமும் குடிநீர் மற்றும் தண்ணீர் தேவை பூர்த்திசெய்யப்படும் என்றார்.அம்மாப்பேட்டை,பவானி,நெரிஞ்சிப்பேட்டையை மையமாக கொண்டு அரசு கலை கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரி அமைக்க கலெக்டர் அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டும்,நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு ஆலைகள் செயல்படவேண்டும்.சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத காரணத்தால் டேங்க் ஆப்ரேட்டர்கள் மூன்று மாத ஊதியம் வழங்காமல் இருந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகளை கலெக்டர் மேற்கொண்டு பெரும்பாலான பகுதிகளில் டேங்க் ஆப்ரேட்டர்கள் தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story