கைது

X
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செயல்பட்டு வரும் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஏடிஎம் இயந்திரத்தில் பணம் தனியாக ஒதுங்கியிருப்பதாக வங்கி மேலாளர் குட்டிகண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து ஏடிஎம்ல் சோதனை செய்தபோது 4 ஆயிரத்து 700 ரூபாய் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.இதுகுறித்து வீடியோ காட்சிகளுடன் சிவகிரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.காவல்துறையினரின் விசாரணையில்,மூங்கில் வியாபாரி ராமு என்பதும் தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பர்கூரில்(ஈரோடு மலைப்பகுதி) இருந்து சுமார் 9 ஆயிரம் பெற்றுவந்து அவற்றை மாற்றியதும் தெரியவந்தது.இதனையடுத்து,நேற்றிரவு ராமுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Next Story

