திருட்டு

X

ஆப்பக்கூடல் அருகே துணிகரம் தொழிலாளி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு மர்மநபர் கைவரிசை
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நாதுராம் (43). இவர் தற்போது ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல், மாங்காளி வீதியில் தங்கி இருந்து டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். நேற்று நாதுராம் வீட்டின் பூட்டு சாவி தொலைந்து போனதால் அறையில் இருந்த பீரோவை மட்டும் பூட்டிவிட்டு கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வேலை முடிந்து மீண்டும் நாதுராம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணம் திருட்டு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story