
X

திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் வளவனுாரில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.பேரூராட்சி செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார்.மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி ஜெயச்சந்திரன், பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், வழக்கறிஞர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் பொன்முடி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிளை வழங்கி பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி அனைத்து திட்டங்களும் தீட்டி செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள அரசு நிதியை தராமல் தமிழகத்திற்கு என்ன இடையூறு செய்தாலும் அதை தகர்த்தெறிந்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். டில்லியில் மோடி, அமித்ஷாவை காண அ.தி.மு.க., வினர் சென்று வருகின்றனர். இவர்கள் எதற்காக சென்றனர் என்பதை கூறாமலே உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க., தான் முதலில் உள்ளது. இரண்டாவது உள்ள கட்சி கூட்டணியாக பேசி முடிவுக்கு வருவர். இந்த இரு கட்சிகளுக்கு தான் வரும் தேர்தலில் போட்டி' என்றார்.முன்னதாக, 'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' தலைப்பில் நிர்வாகிகள் உறுதிமொழியேற்றனர்.நிகழ்ச்சியில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு, பேரூராட்சி நிர்வாகிகள் சரபோஜி, ரகுமான், ராஜன், பழனி, ராஜேந்திரன், விஜயா பெரியசாமி, கந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் அசோக், மன்ற உறுப்பினர்கள் சசிகலா கபிரியேல், மகாலட்சுமி செந்தில், வடிவேல், பாஸ்கரன், பார்த்திபன், பத்மாவதி திரிசங்கு உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story