
X

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 14 முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ள நிலையில் மீனவர் நிவாரணத் தொகையை 15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 14 முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ள நிலையில் மீனவர் நிவாரணத் தொகையை 15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் தடைக்காலங்களில் தமிழக கடல் பகுதியில் கேரள மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதை தடுக்க குழு அமைக்க வேண்டும் கடலோர மேலாண்மை வரைபடத்தில் மீனவர்களின் வாழ்விட இடங்கள் குறிக்கப்பட வேண்டுமென கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர் இதில் மின்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு தொழிலாளர் சங்கம் சார்பில் ஏப்ரல் 14-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் துவங்க உள்ள நிலையில் தமிழக அரசு தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் தடைக்காலங்களில் தமிழக கடல் பகுதிகளில் கேரள மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த மீனவர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மேலும் 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள கடற்கரை மேலாண்மை திட்டத்தின் வரைபடத்தில் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் கடல் பகுதியில் உள்ள மீன் வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார இடங்கள் ஆகியவை குறித்து முறையாக குறிப்பிட வேண்டும் இதற்கு தமிழக அரசின் மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கழிவு நீர்கள் கடலில் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
Next Story