பெண்கள்

X
பெண்கள் & சமூகத்திற்கு எதிராக கண்ணியமற்ற முறையில் பேசக்கூடாது- ஜோதிமணி எம்பி கரூரில் பேட்டி. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல அரசியல் உள்ள யாருமே பெண்களுக்கு எதிராகவும் சமூகத்திற்கு எதிராக கண்ணியமற்ற வகையில் தரமற்ற விஷயங்களை மிக நிச்சயமாக பேசக்கூடாது அது மிக கண்டனத்துக்குரியது மேலும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு இது சம்பந்தமாக மிக வேகமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், ஆட்சியில் இருக்கிறவர்கள், அதிகாரத்தில் இருக்கிறவர்கள், வருங்கால சமுதாயத்தில் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும் ஆளும் ஆட்சியில் ஒரு அமைச்சராகவும் இருக்கிறார். மேலும், முக்கிய ஆளும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் பெண்களுக்கு எதிராக மிக மோசமான முகம் சுளிக்கின்ற முறையில் கருத்துக்களை சொல்லக்கூடாது இது நிச்சயமாக சட்டப்படி தவறு என்று குற்றம் சாட்டினார்.
Next Story

